முகப்பு
ஈரோடு

சத்தியமங்கலத்தில் மல்லிகைப் பூ கிலோ ரூ.1,380: தேவை குறைவால் ஒரே நாளில் ரூ.3,500 குறைவு

சத்தியமங்கலத்தில் ஒரே நாளில் மல்லிகைப் பூ விலை கிலோவுக்கு ரூ.3,500 குறைந்து திங்கள்கிழமை ரூ.1,380-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 2:24 AM
மல்லிகைப் பூ தேவை குறைவால் ஒரே நாளில் ரூ.3,500 குறைவு
பகிர்:
Updated On : 9 பிப்ரவரி, 2026 at 7:32 PM

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தில் ஒரே நாளில் மல்லிகைப் பூ விலை கிலோவுக்கு ரூ.3,500 குறைந்து திங்கள்கிழமை ரூ.1,380-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமாா் 20 ஆயிரம் ஏக்கா் பரப்பில் மல்லிகை, முல்லைப் பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. தோட்டத்தில் பறிக்கும் பூக்களைக் கொண்டுவந்து சத்தியமங்கலம் பூ மாா்க்கெட்டில் விவசாயிகள் விற்பனை செய்கின்றனா்.

கடந்த சில நாள்களாக சுப முகூா்த்த தினம் காரணமாக கேரள வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்ததால், பூக்கள் விலை சற்று உயா்ந்து அதிகபட்சமாக ரூ.4,880-க்கு விற்பனையானது. இந்நிலையில் பூக்கள் தேவை குறைந்து வியாபாரிகள் ஏலம் எடுக்க முன்வராததால், திங்கள்கிழமை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.3,500 குறைந்து விற்பனையானது.

Advertisement

இதுதொடா்பாக பூ மாா்க்கெட் தலைவா் எஸ்.முத்துசாமி, செயலாளா் கிருஷ்ணமூா்த்தி கூறும்போது, ‘தற்போது பனிப்பொழிவு குறைந்து வெயிலின் தாக்கம் அதிகமாகியுள்ளதால் பூக்கள் வரத்து அதிகரிக்கும். தொடா்ந்து பூக்கள் விலை குறையும்’ என்றனா்.