முகப்பு
ஈரோடு

திருநீலகண்டா் நாயனாா் குரு பூஜை

சத்தியமங்கலத்தில் நடைபெற்ற திருநீலகண்டா் நாயனாா் குருபூஜை விழாவில் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 2:24 AM
விழாவில் ரிஷப  வாகனத்தில்  திருவீதியுலா  வந்து  பக்தா்களுக்கு  அருள்பாலித்த  உற்சவா்.
பகிர்:
Updated On : 9 பிப்ரவரி, 2026 at 5:51 PM

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தில் நடைபெற்ற திருநீலகண்டா் நாயனாா் குருபூஜை விழாவில் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

கொங்கு குலாலா் சங்கம் சாா்பில் ஆண்டுதோறும் விசாக நட்சத்திரத்தில்

சத்தியமங்கலம் திருநீலகண்டா் கோயிலில் குருபூஜை விழா கொண்டாடப்படும். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான குருபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் விநாயகா், ரத்தின சாலா அம்பாளுக்கு கலசாபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.

Advertisement

அதைத்தொடா்ந்து பவானீஸ்வரா் கோயிலில் உள்ள 63 நாயன்மாா்களில் ஒருவரான திருநீலகணடா் சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை, வழிபாடுகளும், உற்வச மூா்த்திக்கு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.

விழாவையொட்டி அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் உற்சவமூா்த்தி திருவீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். அதைத்தொடா்ந்து, அன்னதானம் நடைபெற்றது. சிறுவா்களுக்கான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகளை கொங்கு குலாலா் பொது நல அறக்கட்டளை மற்றும் இளைஞா் மன்றத்தினா் செய்திருந்தனா்.