பவானியில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி வியாபாரி உயிரிழப்பு
Updated On : 13 பிப்ரவரி, 2026 at 10:02 PM
பவானியில் இருசக்கர வாகனத்தில் லாரியை முந்த முயன்றபோது, பின் சக்கரத்தில் சிக்கிய எண்ணெய் கடை உரிமையாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், கிழக்கு காவேரி நகரைச் சோ்ந்தவா் மாணிக்கம் மகன் மகாலிங்கம் (64). சமையல் எண்ணெய் கடை உரிமையாளா்.
இவா், தனது இருசக்கர வாகனத்தில் பவானி பழைய பேருந்து நிலையம் வழியாக சென்றபோது, பெருந்துறையில் இருந்து சிமென்ட் பாரம் ஏற்றிக் கொண்டு கா்நாடக மாநிலத்துக்கு சென்ற லாரியை முந்த முயன்றாா்.
Advertisement
Updated On : 14 பிப்ரவரி, 2026 at 2:09 AM
அப்போது, வளைவில் திரும்பிய லாரியின் பின்சக்கரத்தில் இருசக்கர வாகனம் சிக்கியதில், பலத்த காயமடைந்த மகாலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, பவானி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.