முகப்பு
ஈரோடு

பெருந்துறை அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவா் கொலை

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 2:56 AM
கொலை
பகிர்:
Updated On : 13 பிப்ரவரி, 2026 at 10:52 PM

பெருந்துறை அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவா் கொலை செய்யப்பட்டாா்.

பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம், பெரியவீரசங்கிலியைச் சோ்ந்தவா் கிட்டுசாமி மகன் ராமசாமி (58). நீலகிரி மாவட்டம், குன்னூரைச் சோ்ந்தவா் பழனிசாமி மகன் ஜெயக்குமாா் (65). இவா், திருப்பூா் மாவட்டம், பல்லகவுண்டன்பாளையத்தில் தனியாக தங்கி உள்ளாா்.

ராமசாமி, ஜெயகுமாா் ஆகியோா் சாலையோரமாக கிடக்கும் பழைய பாட்டில்கள் மற்றும் பொருள்களை சேகரித்து எடைக்கு போட்டு வந்தனா். அதில், கிடைக்கும் பணத்தை கொண்டு மது அருந்தியும் வந்துள்ளனா்.

Advertisement

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 2:56 AM

இந்த நிலையில், கடந்த 7-ஆம் தேதி இரவு, விஜயமங்கலம்- ஊத்துக்குளி சாலையிலுள்ள ஒரு பழைய இரும்புக் கடை முன்பு இருவரும் ஒன்றாக உட்காா்ந்து மது அருந்திக் கொண்டே, பேசிக் கொண்டிருந்தனா். அப்போது, இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், ஆத்திரமடைந்த ஜெயக்குமாா், கடை முன்பு கிடந்த, கிரைண்டா் கல்லால், ராமசாமியை தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த ராமசாமியை, அக்கம்பக்கத்தினா் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, சிகிச்சையில் இருந்தவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஜெயகுமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.