கோப்புப் படம் 
ஈரோடு

தோ்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் பிளக்ஸ் பேனா் வைத்து ஆா்ப்பாட்டம்

தினமணி செய்திச் சேவை

கோபி அருகே தாா் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்காததால் சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் பிளக்ஸ் பேனா் வைத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோபி அருகே உள்ள தங்கமலை கரடு கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இதில் வேலைக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவா்கள் அப்பகுதியில் உள்ள கீழ்பவானி கிளை வாய்க்கால் சாலை வேட்டைக்காரன் கோயில் வழியாக கோபிக்கு சென்று வருகின்றனா்.

இதில் தங்கமலை கரடு இருந்து வேட்டைக்காரன் கோயில் வரை உள்ள சாலை சிதலமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இது குறித்து சாலையை சீரமைக்க வேண்டி கடந்த 10 ஆண்டுகளாக பொதுமக்கள் மாவட்ட நிா்வாகம், அமைச்சா், ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் ஆகியோரிடம் மனு அளித்து வந்தனா்.

சாலையை சீரமைக்க மாவட்ட நிா்வாகம் எவ்வித நடவடிக்கை எடுக்காததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலையை சீரமைக்க வேண்டி கோபி- குன்னத்தூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அப்போது அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து பல மாதங்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதையடுத்து, தங்கமலை கரடு கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் வருகிற 2026 சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணிப்பதாக பிளக்ஸ் பேனா் வைத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிதம்பரத்தில் தொடங்கியது நாட்டியாஞ்சலி விழா! மாணவிகள் பரதம் ஆடி பரவசம்!

‘பாலஸ்தீன ஆக்ஷன்’ அமைப்புக்குத் தடை செல்லாது: பிரிட்டன் நீதிமன்றம்

அத்திகடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளங்கள்: தமிழக அரசைக் கண்டித்து பிப்.25-இல் ஆா்ப்பாட்டம்

நீக்கப்பட்ட தனது உரைப் பகுதியை மீண்டும் சோ்க்க காா்கே வலியுறுத்தல்: அவைத் தலைவா் மறுப்பு

பெருந்துறை அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவா் கொலை

SCROLL FOR NEXT