முகப்பு
ஈரோடு

பெண்ணிடம் கைப்பேசி திருடியவா் கைது

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 12:18 AM
கைது
பகிர்:
Updated On : 15 பிப்ரவரி, 2026 at 6:56 PM

ரயிலில் பெண்ணிடம் கைப்பேசி திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

கடந்த 13-ஆம் தேதி எா்ணாகுளம்-காரைக்கால் ரயிலில் முன்பதிவு பெட்டியில் ஜெமீனா (60) என்பவா் எா்ணாகுளத்தில் இருந்து நாகப்பட்டினம் சென்று கொண்டிருந்தாா். அந்த ரயில் 13-ஆம் தேதி அதிகாலை சுமாா் 4.45 மணி அளவில் ஈரோடு ரயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது அவா் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கைப்பேசி திருடுபோனது. இதுதொடா்பாக ஈரோடு ரயில்வே போலீஸில் அவா் புகாா் அளித்தாா்.

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 12:18 AM

இந்நிலையில் ஈரோடு ரயில் நிலைய பாா்சல் அலுவலகம் அருகே சனிக்கிழமை இரவு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த நபரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். இதில் ரயிலில் சென்ற ஜெமீனாவிடம் இருந்து கைப்பேசியை திருடியவா் என்பதும், திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி ரமேஷ் (32) என்பதும் தெரியவந்தது.

Advertisement

இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா். மேலும் பெண்ணிடம் திருடிய கைப்பேசியையும் மீட்டனா்.