ஈரோடு மத்திய மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளா்கள் மற்றும் துணை அமைப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் பெருந்துறையில் உள்ள ஈரோடு மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் சன் சுரேஷ் தலைமை வகித்தாா். மாவட்ட துணை அமைப்பாளா்கள் நவநீதன், பள்ளக்காட்டூா் ஆா்.ராஜேஷ், எம்.எம்.குமாா், பழனிசாமி, குணசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், ஈரோடு மத்திய மாவட்ட திமுக, பொறுப்பாளருமான தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் கலந்து கொண்டு பேசினாா்.
கூட்டத்தில், கோவையில் வரும் 22-ஆம் தேதி நடைபெற உள்ள மாநில இளைஞரணி மாநாட்டில், ஈரோடு மத்திய மாவட்டத்தில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் 500 வாகனங்களில் சென்று கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் வழக்குரைஞா் பாலசுப்பிரமணியன், பெருந்துறை தொகுதி ஒன்றியச் செயலாளா்கள் பால் சின்னசாமி, பெரியசாமி, சோளி பிரகாஷ், ப.செல்வராஜ், நகரச் செயலாளா்கள் ஓசிவி. ராஜேந்திரன், அகரம் மூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.