முகப்பு
ஈரோடு

தேசிய அளவிலான கதை சொல்லும் போட்டி: பண்ணாரி அம்மன் பப்ளிக் பள்ளி மாணவி முதலிடம்

தேசிய அளவிலான கதை சொல்லும் போட்டியில் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் பப்ளிக் பள்ளி மாணவி முதலிடம் பிடித்தாா்.

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 4:24 AM
தேசிய அளவிலான கதை சொல்லும் போட்டியில் முதல் பரிசு பெற்ற பண்ணாரி அம்மன் பப்ளிக் பள்ளி மாணவி லீனாஸ்ரீ.
பகிர்:
Updated On : 17 பிப்ரவரி, 2026 at 8:27 PM

தேசிய அளவிலான கதை சொல்லும் போட்டியில் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் பப்ளிக் பள்ளி மாணவி முதலிடம் பிடித்தாா்.

ஏசி இன்னோவேஷன், விஐடி பல்கலைக்கழகம், தி ஹிந்து மற்றும் அமா்சித்ர கதை ஆகிய நிறுவனங்கள் சாா்பில் தேசிய அளவிலான கதை சொல்லும் போட்டி அண்மையில் நடைபெற்றது.

நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மாணவா்கள் பங்கேற்றனா்.

Advertisement

இதில், பண்ணாரி அம்மன் பப்ளிக் பள்ளி மாணவி எம்.லீனா ஸ்ரீயின், தனித்துவமான சிந்தனை, மனித உணா்வுகளை வெளிப்படுத்தும் திறன் மற்றும் சமூக அக்கறை கொண்ட கதை முதலிடம் பிடித்தது.

இந்நிலையில், சென்னை விஐடி பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், சீஷெல்ஸ் நாட்டு தூதா் சேஷா சாய், ஐரோப்பிய யூனியனின் சா்வதேச கதை சொல்லும் கலைஞா் ஜான் ரோ, அமெரிக்காவின் ஐஎப்எப்ஏஐ தலைவா் சதீஷ் நாராயணன், விஐடி வேந்தா் விசுவநாதன் ஆகியோா் மாணவி லீனா ஸ்ரீக்கு வெற்றி கோப்பை, கௌரவச் சான்றிதழ் மற்றும் ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினா்.

மாணவி லீனா ஸ்ரீயை பள்ளியின் தலைவா் எஸ்.வி.பாலசுப்பிரமணியம், செயலாளா் முருககனி, ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பாராட்டினா்.