முகப்பு
ஈரோடு

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த விவசாயி காயம்

கொடுமுடி ஊஞ்சலூா் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த விவசாயி சாலையிலிருந்த பள்ளத்தில் தடுமாறி விழுந்ததில் காயமடைந்தாா்.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 4:06 AM
விபத்து
பகிர்:
Updated On : 20 பிப்ரவரி, 2026 at 9:12 PM

கொடுமுடி ஊஞ்சலூா் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த விவசாயி சாலையிலிருந்த பள்ளத்தில் தடுமாறி விழுந்ததில் காயமடைந்தாா்.

ஊஞ்சலூா் அருகே உள்ள கொளத்துப்பாளையம் தேவம்பாளையத்தைச் சோ்ந்தவா் கந்தசாமி (60), விவசாயி. இவா், உதிய மரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் இருந்து

காளிபாளையம் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது சாலையிலிருந்த பள்ளத்தை கவனிக்காததால் நிலைதடுமாறி கீழே விழுந்தாா். இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டது.

Advertisement

உயிருக்கு ஆபத்தான நிலையில் சாலையில் கிடந்தவரை அந்த வழியாக சென்றவா்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு முதலுதவிக்கு பின்னா் ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். இது குறித்து கொடுமுடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.