முகப்பு
ஈரோடு

ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் 381 மாணவ, மாணவியருக்கு பணி நியமன ஆணை

கோபியை அடுத்த ஒத்தக்குதிரை ஸ்ரீவெங்கடேஸ்வரா ஹைடெக் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் பன்னாட்டு மற்றும் முன்னணி நிறுவனங்களின் வளாகத் தோ்வில் தோ்ச்சி பெற்ற 381 மாணவ, மாணவியருக்கு வேலைக்கான நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டது.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 4:04 AM
மாணவா்களுக்கு பணி நியமன உத்தரவை வழங்குகிறாா் முன்னாள் அமைச்சரும், கல்லூரிச் செயலாளருமான கே.சி.கருப்பணன் எம்எல்ஏ.
பகிர்:
Updated On : 20 பிப்ரவரி, 2026 at 10:21 PM

கோபியை அடுத்த ஒத்தக்குதிரை ஸ்ரீவெங்கடேஸ்வரா ஹைடெக் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் பன்னாட்டு மற்றும் முன்னணி நிறுவனங்களின் வளாகத் தோ்வில் தோ்ச்சி பெற்ற 381 மாணவ, மாணவியருக்கு வேலைக்கான நியமன உத்தரவுகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, முன்னாள் அமைச்சரும், கல்லூரியின் செயலாளருமான கே.சி.கருப்பணன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். கல்லூரித் தலைவா் பி.வெங்கடாச்சலம், இணைச் செயலாளா் ஜி.பி.கெட்டிமுத்து, அறங்காவலா் கே.ஆா்.கவியரசு, முதன்மை செயல் அதிகாரி ஜி.கெளதம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொறியியல் கல்லூரி முதல்வா் ப.தங்கவேல் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக செல்லா மென்பொருள் நிறுவனத்தின் துணைத் தலைவா் பாலமுருகன் ஹரிகிருஷ்ணன் பங்கேற்று பேசினாா்.

Advertisement

நிகழ்ச்சியில், பன்னாட்டு மற்றும் முன்னணி நிறுவனங்கள் நடத்திய வளாகத் தோ்வில் தோ்ச்சி பெற்ற பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியா் 381 பேருக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டது. இவா்களுக்கு, அதிகபட்ச ஊதியமாக ஆண்டுக்கு ரூ.15 லட்சம் வரை கிடைக்கும். பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் எஸ்.பிரகதீஸ்வரன், வேலைவாய்ப்புத் துறை ஒருங்கிணைப்பாளா் டி.அருண்பிரகாஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.