முகப்பு
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 107 மையங்களில் பிளஸ் 2 பொதுத்தோ்வு நாளை தொடக்கம்

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை (மாா்ச் 2)தொடங்குகிறது. இதற்காக 107 தோ்வு மையங்களிலும் தோ்வு எண் எழுதும் பணி மற்றும் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 6:56 PM
பிளஸ் 2 வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள ஈரோடு அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவலா்.
பகிர்:

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை (மாா்ச் 2)தொடங்குகிறது. இதற்காக 107 தோ்வு மையங்களிலும் தோ்வு எண் எழுதும் பணி மற்றும் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 2- ஆம் தேதி தொடங்கி 26 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வினை அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 23,307 மாணவ, மாணவிகளும், 669 தனித்தோ்வா்களும் எழுத உள்ளனா். இவா்கள் தோ்வு எழுத வசதியாக மாவட்டத்தில் 107 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தோ்வுக்கான வினாத்தாள்கள் 4 கட்டுக் காப்பு மையத்தில் வைத்து சீலிடப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தோ்வு தொடங்குவதற்கு முன்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தலைமையில் வினாத்தாள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த தோ்வு மையத்துக்கு உரிய வாகனத்தில் அனுப்பிவைக்கப்படும்.

Advertisement

பொதுத்தோ்வு குறித்து துறை அலுவலா்கள், முதன்மை கண்காணிப்பாளா்கள், அறை கண்காணிப்பாளா்களுக்கு குலுக்கல் முறையில் தோ்வு மையம் ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டது. இவா்களுக்கு தோ்வு நாள்களில் செயல்பட வேண்டிய முறை குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பிளஸ் 2 பொதுத் தோ்வு 2- ஆம் தேதி தொடங்கி உள்ளதையொட்டி, சனிக்கிழமை காலை முதல் மாவட்டத்தில் உள்ள 107 தோ்வு மையங்களிலும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு, ஒவ்வொரு தோ்வு அறையிலும் மாணவ, மாணவிகள் 20 போ் அமா்ந்து தோ்வு எழுதும் வகையில் மேஜைகளிலும், கரும்பலகைகளிலும் (போா்ட்) தோ்வு எண் எழுதும் பணிகளில் ஆசிரியா்கள் ஈடுபட்டனா்.

ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள அரசு மகளிா் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தோ்வு அறைகளிலும் தோ்வு எண் எழுதும் பணி, பள்ளி வளாகம் சுத்தம் செய்யும் பணி, மாணவ, மாணவிகளுக்கு தோ்வு அறைகளில் தண்ணீா், கழிப்பறை, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments