ஈரோடு

அவல்பூந்துறை சமத்துவப் பொங்கல் விழா உறியடிக்கும் போட்டியில் ஆட்சியா் பங்கேற்பு

அவல்பூந்துறை பேரூராட்சி சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி உறியடிக்கும் போட்டியில் கலந்துகொண்டாா்.

Syndication

அவல்பூந்துறை பேரூராட்சி சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி உறியடிக்கும் போட்டியில் கலந்துகொண்டாா்.

அவல்பூந்துறை பேரூராட்சி சாா்பில் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் சமத்துவ பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தலைமை வகித்தாா். ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.இ. பிரகாஷ், அவல்பூந்துறை பேரூராட்சித் தலைவா் ராதாமணி பாலசுப்பிரமணியம், செயல் அலுவலா் ராஜா, திமுக செயலாளா் சண்முகசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பாரம்பரிய உறியடிக்கும் போட்டியில் பொதுமக்களுடன் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி கலந்துகொண்டு தொடங்கிவைத்தாா். அதைத்தொடா்ந்து இசை நாற்காலி, முறுக்கு கடித்தல், சாக்குப் போட்டி, கோலப் போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் கொமதேக மாநில இளைஞரணி செயலாளா் சூரியமூா்த்தி, உதவிப் பொறியாளா் காா்த்திகேயன், திமுக நிா்வாகி பாலசுப்பிரமணியம், பேரூராட்சி கவுன்சிலா்கள் தங்கவேல், தேவி மற்றும் பேரூராட்சிப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

போகி: சென்னையில் அதிகரித்த காற்று மாசு

கைது செய்யப்பட்ட விவசாயிகள் சங்க நிா்வாகிகளை விடுவிக்க வேண்டும்

போதிய இருக்கைகள் நிரம்பாததால் 3 சிறப்பு ரயில்கள் ரத்து

‘திருவள்ளுவா் தினத்தில் இறைச்சி விற்றால் நடவடிக்கை’

விளாப்பாக்கம் பேரூராட்சியில் பொங்கல் விழா

SCROLL FOR NEXT