ஈரோடு

பெருந்துறையில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை தேங்காய் ஏலம்

பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை தேங்காய் ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை தேங்காய் ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கூட்டுறவு சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை மட்டை உரித்த தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் உள்ளூா், வெளியூா் மற்றும் வெளி மாநில வியாபாரிகள் கலந்துகொண்டு, தேங்காய்களை கொள்முதல் செய்து வருகின்றனா்.

தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள், தங்களது மட்டை உரித்த தேங்காய்களை தரம் வாரியாக பிரித்து, ஏலம் மையத்துக்கு வாரம்தோறும் வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் 9 வரை கொண்டு வந்து, ஏலத்தில் கலந்து கொண்டு, நல்ல விலைக்கு விற்று பயன்பெறலாம். ஏலம் முடிந்தவுடன் விற்பனைத் தொகை வங்கி மூலம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT