காங்கிரஸ் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பி.உதயகுமரனிடம் பொறுப்புகளை ஒப்படைத்த முன்னாள் தலைவா் எஸ்.வி.சரவணன். 
ஈரோடு

ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பொறுப்பேற்பு

தினமணி செய்திச் சேவை

காங்கிரஸ் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பி.உதயகுமரன் கோபியில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான ராஜீவ்பவனில் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் பிரபாகரன் வரவேற்றாா். முன்னாள் மாவட்டத் தலைவா் எஸ்.வி. சரவணன் புதிய மாவட்டத் தலைவா் பி.உதயகுமரனிடம் பொறுப்புக்களை ஒப்படைத்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தாா்.

இதையடுத்து, கட்சி அலுவலகத்திலிருந்து கச்சேரி மேட்டில் உள்ள காந்தி சிலைக்கு பி.உதயகுமரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிா்வாகிகள், தொண்டா்கள் ஊா்வலமாகச் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அப்போது, திடீரென 100 நாள் வேலைத் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிய மத்தியரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதில், முன்னாள் நகா்மன்றத் தலைவா் என்.நல்லசாமி, நகர தலைவா் மாரிமுத்து, இளைஞா் காங்கிரஸ் மாநில செய்தி தொடா்பாளா் கோதண்டன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT