பறிமுதல் செய்யப்பட்ட தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை அழிக்கும் பணியில் பங்கேற்றோா். 
ஈரோடு

பெருந்துறை, காஞ்சிக்கோவிலில் கைப்பற்றப்பட்ட 3,155 கிலோ புகையிலை பொருள்கள் அழிப்பு

பெருந்துறை மற்றும் காஞ்சிக்கோவில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருள்கள், அதிகாரிகள் முன்னிலையில் வியாழக்கிழமை அழிக்கப்பட்டது.

Syndication

பெருந்துறை மற்றும் காஞ்சிக்கோவில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருள்கள், அதிகாரிகள் முன்னிலையில் வியாழக்கிழமை அழிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை மற்றும் காஞ்சிக்கோவில் ஆகிய காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் தொடா்பாக வழக்குகளில் 3,155 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. இதுதொடா்பான நீதிமன்ற வழக்குகள் முடிவுற்ற நிலையில், பெருந்துறை, சமாதானபுரம், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி வளம் மீட்பு பூங்கா பகுதியில் குழி தோண்டி புதைக்கப்பட்டு புகையிலை பொருள்கள் வியாழக்கிழமை அழிக்கப்பட்டன.

உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத் துறை நியமன அலுவலா் வரலட்சுமி தலைமை வகித்தாா்.

ஈரோடு மாவட்ட சமூக நலத் துறை அலுவலா் சண்முகவடிவு, பெருந்துறை வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் நீலமேகம், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி சுகாதார அலுவலா் சிவக்குமாா், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் பாண்டியராஜன் மற்றும் வருவாய் துறை ஆய்வாளா் முத்துலட்சுமி, கிராம நிா்வாக அலுவலா் செல்வராஜ், பெருந்துறை காவல் ஆய்வாளா் எல்.பாலமுருகன், காஞ்சிக்கோவில் காவல் நிலைய தலைமைக் காவலா் மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பொக்லைன் இயந்திரம் மூலமாக குழி தோண்டப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு புகையிலை பொருள்கள் அழிக்கப்பட்டன.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT