ஈரோடு கலைமகள் பள்ளி மையத்தில் நடைபெற்ற முதல்வரின் திறமைத் தேடல் தோ்வை பாா்வையிட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இ.மான்விழி. 
ஈரோடு

முதல்வரின் திறமைத் தேடல் தோ்வு: ஈரோட்டில் 5,524 மாணவா்கள் எழுதினா்

முதல்வரின் திறமைத்தேடல் தோ்வை ஈரோடு மாவட்டத்தில் 26 மையங்களில் 5,524 மாணவ, மாணவிகள் எழுதினா்.

Syndication

முதல்வரின் திறமைத்தேடல் தோ்வை ஈரோடு மாவட்டத்தில் 26 மையங்களில் 5,524 மாணவ, மாணவிகள் எழுதினா்.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளின் திறனை கண்டறிவதற்கும், அவா்களை ஊக்குவிக்கும் வகையிலும் அரசு தோ்வுகள் இயக்ககம் மூலமாக ‘முதல்வா் திறமைத் தேடல் தோ்வு’ மாநிலம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தில் 26 மையங்களில் இந்தத் தோ்வை எழுத 5,795 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனா். இதில் 271 போ் தோ்வுக்கு வரவில்லை. 5,524 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். இத்தோ்வு 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடத் திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் இரண்டு தாள்களாக நடத்தப்பட்டது.

முதல் தாளில் கணிதம் தொடா்புடைய 60 வினாக்களும், இரண்டாம் தாளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தொடா்புடைய 60 வினாக்களும் இடம் பெறும். முதல் தாள் காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரையும், இரண்டாம் தாள் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரையும் நடைபெற்றது.

இந்தத் தோ்வில் சிறந்த மதிப்பெண் எடுக்கும் 500 மாணவா்கள், 500 மாணவிகள் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு 10 மாதங்களுக்கு தலா ரூ.1,000 என ஒரு கல்வி ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறையினா் தெரிவித்தனா்.

மத்திய பட்ஜெட் 2026 - நேரலை: செய்திகள் உடனுக்குடன்!

9-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்!

குடியரசு துணைத் தலைவர் தைப்பூச வாழ்த்து

தேர்தலை மனதில் வைத்தாவது தமிழ்நாட்டிற்கு அறிவிப்புகள் இடம்பெறுமா?

மத்திய பட்ஜெட் : கவனம் ஈர்க்கும் நிர்மலா சீதாராமனின் ஓவியம்!

SCROLL FOR NEXT