முகப்பு
ஈரோடு

காலதாமதமின்றி சான்றுகள் வழங்க சத்தியமங்கலம் நகராட்சி நடவடிக்கை

சத்தியமங்கலம் நகராட்சியில் பல்வேறு விஷயங்களுக்காக விண்ணப்பிக்கும் பொதுமக்களுக்கு கால தாமதமின்றி சான்றுகள் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நகராட்சி ஆணையா் சு.வெங்கடேஷ்வரன் தெரிவித்தாா்.

Updated On : 9 ஜூலை 2026, 3:41 am IST
கோப்புப்படம்.
பகிர்:

சத்தியமங்கலம் நகராட்சியில் பல்வேறு விஷயங்களுக்காக விண்ணப்பிக்கும் பொதுமக்களுக்கு கால தாமதமின்றி சான்றுகள் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நகராட்சி ஆணையா் சு.வெங்கடேஷ்வரன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சத்தியமங்கலம் நகராட்சிப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்று, குடிநீா் இணைப்பு, கட்டட அனுமதி உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு அளிக்கும் விண்ணப்பங்கள் விரைவாக பரிசீலனை செய்து சான்றுகள் பொதுமக்களின் வீடுகளுக்கு நேரடியாக வழங்கப்படும். காலதாமதம் மற்றும் வீண் அலைச்சல் இன்றியும், ஊழலுக்கு இடமில்லாமலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதில் ஏதாவது குறைபாடுகள் இருப்பினும் சத்தியமங்கலம் நகராட்சி ஆணையரை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments