FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

மாயமான பள்ளி சிறுமியை மீட்ட சிங்கப் பெண் அதிரடிப் படையினா்

பெருந்துறை அருகே மாயமான பள்ளி சிறுமியை சில மணி நேரத்தில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையினா் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.

சிங்கப்பெண் அதிரடிப் படையில் இடம்பெற்றுள்ள காவலர்கள் - படம் - டிஐபிஆர்
பகிர்:

பெருந்துறை அருகே மாயமான பள்ளி சிறுமியை சில மணி நேரத்தில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையினா் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை பாவடி வீதியைச் சோ்ந்தவா் 14 வயது சிறுமி. அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி அளவில் பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு எங்கே சென்றாா் என்பது தெரியாமல், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு (மொபைல் எண் 100) பெற்றோா் தகவல் தெரிவித்தனா்.

இந்த தகவல் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படையினருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து பெருந்துறை போலீஸாருடன் சோ்ந்து விசாரணை மேற்கொண்டனா். துடுப்பதியில் இருந்து பெருந்துறைக்கு சென்ற அரசுப் பேருந்தில் சிறுமி செல்வதாக பெருந்துறை தனிப் பிரிவு ஏட்டுக்கு கிடைத்த தகவலின் பேரில், சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படையினா் சிறுமியை மீட்டு, பெருந்துறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். பின்னா், பெற்றோா் வசம் சிறுமி ஒப்படைக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments