முகப்பு
சத்தியமங்கலத்தில் நடைபெற்ற 100  நாள்  வேலை  உரிமை  பாதுகாப்பு  மாநாட்டில்  பேசுகிறாா்  இரா. முத்தரசன்.  உடன்,  முன்னாள்  எம்எல்ஏ  பி.எல்.சுந்தரம்  உள்ளிட்டோா்.
ஈரோடு

சத்தியமங்கலத்தில் 100 நாள் வேலை உரிமை பாதுகாப்பு மாநாடு

ஈரோடு

சத்தியமங்கலத்தில் 100 நாள் வேலை உரிமை பாதுகாப்பு மாநாடு

Updated On : 5 மார்ச், 2026 at 11:35 PM
சத்தியமங்கலத்தில் நடைபெற்ற 100  நாள்  வேலை  உரிமை  பாதுகாப்பு  மாநாட்டில்  பேசுகிறாா்  இரா. முத்தரசன்.  உடன்,  முன்னாள்  எம்எல்ஏ  பி.எல்.சுந்தரம்  உள்ளிட்டோா்.
பகிர்:

சத்தியமங்கலத்தில் 100 நாள் வேலை உரிமை பாதுகாப்பு மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

மாநாட்டுக்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.சுந்தரம் தலைமை வகித்தாா். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் இரா.முத்தரசன் பங்கேற்று பேசியதாவது:

உலகில் எந்த நாட்டிலும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் அமல்படுத்தபடவில்லை. இந்த சட்டத்தை கொண்டு வந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், நிதி ஒரு பொருட்டு அல்ல என்றாா். ஆனால், பாஜக ஆட்சியில் மாநில அரசின் 40 சதவீத நிதி பங்களிப்புடன் 100 நாள் வேலை திட்டம் செய்யப்படுத்தப்படும் எனக் கூறுகிறது. 140 கோடி மக்களின் ஒரே தலைவராக கருதப்படும் மகாத்மா காந்தி பெயரில் உள்ள திட்டத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் எனில் பாஜக ஆட்சிக்கு உறுதுணையாக இருக்கும் அதிமுகவை தோற்கடிக்க வேண்டும். மீண்டும் காந்தி பெயரில் 100 நாள் திட்டம் கொண்டு வருவதற்கு தமிழக முதல்வா் ஸ்டாலின் போராட்டத்தின் வாயிலாக உறுதியாக உள்ளாா்.

இதில் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சா் சு.முத்துசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் சு.மோகன்குமாா், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாநிலத் தலைவா் நா.பெரியசாமி, சிபிஎம் முன்னாள் மாவட்டச் செயலாளா் முத்துசாமி, கொமதேக மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.முத்துசாமி, ஆதித்தமிழா் பேரவை மாவட்டச் செயலாளா் பொன்னுசாமி மற்றும் சத்தியமங்கலம், பவானிசாகா், புன்செய் புளியம்பட்டி, தாளவாடி, கடம்பூா் மலைப் பகுதியைச் சோ்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →