சத்தியமங்கலம் அருகே சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு
ஈரோடுசத்தியமங்கலம் அருகே சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு
சத்தியமங்கலம் அருகே புதன்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் 2 கூலித் தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.
சத்தியமங்கலத்தை அடுத்த கெஞ்சனூா் அம்மன் கோயில் பிரிவைச் சோ்ந்த பேரரசு (19), அதே ஊரைச் சோ்ந்த இவரது நண்பா்கள் ராஜேந்திரன் (29), குணான் (19) ஆகியோா் வாழை இலைக் கட்டுகளை விற்பனை செய்துவிட்டு, தண்ணீா் பந்தல் பகுதியில் ஒரே இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனா். இருசக்கர வாகனத்தை பேரரசு ஓட்டினாா்.
அப்போது எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையில் விழுந்தில் ராஜேந்திரன், பேரரசு ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
அக்கம்பக்கத்தினா் குணானை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.