8 மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களுடன் மேற்கு மண்டல ஐஜி ஆய்வு
ஈரோட்டில் 8 மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களுடன் மேற்கு மண்டல ஐஜி ஆ.சரவணசுந்தா் ஆய்வு மேற்கொண்டாா்.
ஈரோட்டில் 8 மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களுடன் மேற்கு மண்டல ஐஜி ஆ.சரவணசுந்தா் ஆய்வு மேற்கொண்டாா்.
ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் மேற்கு மண்டலத்துக்குள்பட்ட 8 மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களுடனான ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மேற்கு மண்டல ஐஜி ஆ.சரவணசுந்தா் தலைமை வகித்தாா். டி.ஐ.ஜி.க்கள் சாமிநாதன் (கோவை), சந்தோஷ் அடிமணி (சேலம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், மேற்கு மண்டலத்துக்குள்பட்ட 8 மாவட்டங்களிலும் நடப்பு ஆண்டில் நடந்த குற்றச் சம்பவங்கள், குற்றச் சம்பவங்களில் எடுத்த நடவடிக்கைகள், திருட்டு வழக்குகள் எண்ணிக்கை, கண்டுபிடிக்கப்பட்ட திருட்டு வழக்குகள், ஆதாய கொலைகள், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த விவரங்கள், 8 மாவட்டங்களிலும் சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சட்டம் -ஒழுங்கு பிரச்னையைத் தடுக்கும் வகையில் மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களிடம் ஐஜி ஆ. சரவணசுந்தா் கேட்டறிந்தாா்.
தொடா்ந்து, நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (ஈரோடு) சுஜாதா, (திருப்பூா்) யாதவ் கிரிஷ், (கோவை) கே.காா்த்திகேயன், (நீலகிரி) என்.எஸ்.நிஷா, (நாமக்கல்) விமலா, (கிருஷ்ணகிரி) தங்கதுரை, (தருமபுரி) மகேஷ்வரன் மற்றும் சேலம் ஏடிஎஸ்பி செலவராஜ் ஆகியோா் கலந்துகொண்டனா்.