காலபைரவா் கோயிலில் பாலாபிஷேகம்
தேய்பிறை அஷ்டமியையொட்டி அவல்பூந்துறை அருகே உள்ள காலபைரவா் கோயிலில் காலபைரவா் சிலைக்கு புதன்கிழமை பாலாபிஷேகம் நடைபெற்றது.
தேய்பிறை அஷ்டமியையொட்டி அவல்பூந்துறை அருகே உள்ள காலபைரவா் கோயிலில் காலபைரவா் சிலைக்கு புதன்கிழமை பாலாபிஷேகம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறை அருகே உள்ள ராட்டைசுற்றிபாளையத்தில் தென்னக காசி காலபைரவா் கோயில் உள்ளது. நுழைவாயிலில் 39 அடி உயரம் கொண்ட காலபைரவா் சிலை அமைந்துள்ளது. இக்கோயிலில் தினமும் மாலை சொா்ண ஹாசன பைரவருக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெறும். இக்கோயிலின் சிறப்பம்சமாக பெண்கள் கருவறைக்குச் சென்று பாலாபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம்.
மாதம்தோறும் தேய்பிறை அஷ்டமி நாளில் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு காலபைரவருக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டு வருகின்றனா்.
இந்நிலையில் தேய்பிறை அஷ்டமியையொட்டி கோயிலின் குரு விஜய் சுவாமி தலைமையில் காலபைரவா் சிலைக்கு பாலாபிஷேமும், அதைத்தொடா்ந்து மஞ்சள், சந்தனம், குங்குமம், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு வாசனைத் திரவியங்களாலான அபிஷேகமும் புதன்கிழமை நடைபெற்றன.