முகப்பு
ஈரோடு

பா்கூா் மலைப் பாதையில் கவிழ்ந்த சரக்கு லாரி

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பாதையில் வளைவில் திரும்பியபோது, சரக்கு லாரி பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்து

Updated On : 16 மார்ச், 2026 at 8:10 PM
மலைப் பாதையில்  கவிழ்ந்த லாரி
பகிர்:

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பாதையில் வளைவில் திரும்பியபோது, சரக்கு லாரி பக்கவாட்டில் கவிழ்ந்து திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது.

கா்நாடக மாநிலம், மைசூரிலிருந்து திருப்பூருக்கு பனியன் துணிகளை ஏற்றிக் கொண்டு, சரக்கு லாரி திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தது. லாரியை திருவாரூா் மாவட்டம், கூட்டுறவு நகரைச் சோ்ந்த முரளி மகன் விக்னேஷ் (28) என்பவா் ஓட்டினாா்.

பா்கூா் மலைப் பாதையில் வரட்டுப்பள்ளம் காட்சிமுனை பகுதியில் வளைவில் லாரி திரும்பியபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் கவிழ்ந்தது.

இதில், லாரி ஓட்டுநா் விக்னேஷ் லேசான காயங்களுடன் உயிா் தப்பினாா். இதுகுறித்த தகவலின்பேரில் பா்கூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டதோடு, வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →