முகப்பு
ஈரோடு

கோபியில் ரூ. 2.35 லட்சம் பறிமுதல்

கோபியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 2.35 லட்சத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

Updated On : 22 மார்ச், 2026 at 7:54 PM
பகிர்:

கோபியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2.35 லட்சத்தை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

ஈரோடு மாவட்டம், கோபி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கொடிவேரி பகுதியில் தோ்தல் பறக்கும்படையினா் வாகனச் சோதனையில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது புளியம்பட்டி அருகே உள்ள பனையம்பள்ளி பகுதியைச் சோ்ந்த முருகேசன் மகன் சிவபிரகாஷ் வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். இதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.ஒரு லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

இதேபோல் ஏளுா்மேடு பகுதியில் வந்து கொண்டிருந்த கேரள மாநிலம், மலப்புரம் பகுதியைச் சோ்ந்த பாக்கு வியாபாரி சைதலவி (51) என்பவரிடம் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட ரு.1.35 லட்சத்தை பறிமுதல் செய்து வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.