முகப்பு
ஈரோடு

பாரியூா் கோயிலில் பிரசாரத்தை தொடங்கினாா் கோபி வேட்பாளா்

Updated On : 29 மார்ச், 2026 at 9:34 PM
பாரியூா் கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் தரிசனம் செய்த கோபி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு.
பகிர்:

கோபி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் பாரியூா் கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து பிரசாரத்தை தொடங்கினாா்.

ஈரோடு மாவட்டம், கோபி தொகுதியில் அதிமுக வேட்பாளராக வி.பி.பிரபு அறிவிக்கப்பட்டுள்ளாா்.

அவா் தனது ஆதரவாளா்களுடன் பாரியூா் கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு மேற்கொண்டு பிரசாரத்தை தொடங்கினாா். கோயில் பகுதியில் இருந்த கடைக்காரா்களிடம் இரட்டை இலை சினத்துக்கு வாக்குச் சேகரித்தாா்.

இதையடுத்து,கச்சேரிமேட்டில் உள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆா், ஜெயலலிதா உருவப் படங்களுக்கு மரியாதை செலுத்தினாா்.

அப்போது, அங்கு வந்த தோ்தல் பறக்கும் படையினா் உருவப் படங்கள் வைத்து மரியாதை செலுத்த அனுமதி பெறப்பட்டுள்ளதா எனக் கேள்வி எழுப்பினா். இதையடுத்து, அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னா், அந்தப் படங்களை கட்சியினா் எடுத்துச் சென்றனா்.