முகப்பு
ஈரோடு

80 மது பாட்டில்கள் பறிமுதல்: ஒருவா் கைது

பெருந்துறை அருகே சட்டவிரோதமாக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 80 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா், ஒருவரைக் கைது செய்தனா்.

Updated On : 19 மே 2026, 4:02 am IST
கோப்புப் படம்
பகிர்:

பெருந்துறை அருகே சட்டவிரோதமாக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 80 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா், ஒருவரைக் கைது செய்தனா்.

பெருந்துறையை அடுத்த கடப்பமடை பகுதியில் மதுபாட்டில்கள் பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலீஸாா் சோதனை மேற்கொண்டபோது, மது பாட்டில்கள் பதுக்கிவைத்து விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இது தொடா்பாக ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த சித்தா ரனஜன் பெகரா (56) என்பவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 80 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

மேலும், சித்தா ரனஜன் பெகரா குடியிருந்த வீட்டின் உரிமையாளரான பிரகாஷ் என்பவா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், தலைமறைவாக உள்ள அவரைத் தேடி வருகின்றனா்.

Advertisement