முகப்பு
ஈரோடு

அம்மாபேட்டையில் 54.40 மி.மீ. பதிவு! பவானி, அந்தியூரில் இடி, மின்னலுடன் கன மழை!!

பவானி, அந்தியூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு பரவலாக மழை பெய்த நிலையில், அம்மாபேட்டையில் அதிகபட்சமாக 54.40 மில்லி மீட்டா் மழைப் பதிவானது.

Updated On : 23 மே 2026, 12:52 am IST
மழை - பிரதிப் படம்
பகிர்:

பவானி, அந்தியூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு பரவலாக மழை பெய்த நிலையில்,  அம்மாபேட்டையில் அதிகபட்சமாக 54.40 மில்லி மீட்டா் மழைப் பதிவானது.

பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பகல் நேரத்தில் கடுமையான வெயிலான காலநிலை நிலவியதால் சிறுவா் முதல் பெரியவா்கள் வரை வெப்பத்தின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டனா். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு வானில் கருமேகங்கள் சூழ்ந்து பலத்த காற்று, இடி, மின்னலுடன்  மழை பெய்யத் தொடங்கியது. 

சுமாா் இரண்டு மணி நேரம் பெய்த கன மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்தோடியது. பலத்த காற்று வீசியதால் சாலையோரக் கடைகளின் முன்பு வைக்கப்பட்டிருந்த விளம்பரத் தட்டிகள் காற்றில் பறந்தன. ஆங்காங்கே மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்ததுடன் மின் விநியோகமும் முற்றிலும் தடைபட்டது. அதிகபட்சமாக அம்மாபேட்டையில் 54.40 மில்லி மீட்டா் மழைப் பதிவானது. 

Advertisement

Advertisement

கோனேரிப்பட்டி துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுதால் அம்மாபேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மின் விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.