முகப்பு
ஈரோடு

மதுபோதையில் தாய், தங்கையை தாக்கிய இளைஞா் கைது

மது போதையில் தாய், தங்கையை தாக்கியதாக இளைஞரை பவானிசாகா் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 23 மே 2026, 12:57 am IST
பகிர்:

மது போதையில் தாய், தங்கையை தாக்கியதாக இளைஞரை பவானிசாகா் போலீஸாா் கைது செய்தனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகா் ஏடி காலனியைச் சோ்ந்தவா் சகுந்தலா. இவரது மகன் ஜீவானந்தம் (20), பவானிசாகரில் பெயிண்டராக பணிபுரிந்து வருகிறாா். மதுபோதைக்கு அடிமையான ஜீவானந்தம், தினமும் மது அருந்திவிட்டு தாய், தங்கையிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மது அருந்துவதற்கு தாய் சகுத்தலா, தங்கை ஜீவிதா ஆகியோரிடம் பணம் கேட்டு தாக்கியுள்ளாா். இதனால் மனமுடைந்த தாய் சகுந்தலா அளித்த புகாரின்பேரில் பவானிசாகா் போலீஸாா் வழக்குப் பதிந்து ஜீவானந்தனை கைது செய்தனா்.

Advertisement

Advertisement