நீலகிரி

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட மாநாடு

DIN

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட மாநாடு கூடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 ராஜன் நினைவு அரங்கத்தில் நடைபெற்ற இம்மாநாட்டுக்கு, மாவட்ட தலைவர் என்.வாசு தலைமை வகித்தார்.
 மாநாட்டில், நீலகிரியில் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்க வேண்டும். சிறு விவசாயிகளுக்கு நிலப் பட்டா வழங்க வேண்டும். கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகள் பச்சைத் தேயிலைக்கு விலையை குறைப்பதை நிறுத்த வேண்டும். கூட்டுறவு தொழிற்சாலைகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்.  
 100 நாள் வேலை உறுதித் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். தமிழ்நாடு தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்யவேண்டும். மசினகுடியில் அரசு மருத்துவக் கல்லூரி நிறுவ வேண்டும். உள்ளூர் விவசாய விளை பொருள்களுக்கு நியாயமான விலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

SCROLL FOR NEXT