நீலகிரி

கூக்கல் தொரை நீரோடையில் கொட்டப்படும் கோழிக் கழிவுகள்

DIN

கோத்தகிரி  கூக்கல் தொரை நீரோடையில் கோழிக் கழிவுகள் கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  
கூக்கல் தொரை பகுதியில் ஓடும் நீரோடையை சீகுளா, கூக்கல் தொரை பகுதி கிராம மக்கள் குடிநீராகப் பயன்படுத்தி வருகின்றனர். இதுதவிர,  விவசாயத்துக்கும் இந்த ஓடை நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,  இந்த நீரோடையில் கோழி உள்ளிட்ட இறைச்சிக் கழிவுகளை சிலர் கொட்டி வருகின்றனர். இதனால்,  நீராதாரம் கெடுவதோடு தொற்று நோய் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே,  ஓடையில் இறைச்சிக் கழிவுகளைக் கொட்டுபவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

ஓ மை ரித்திகா!

SCROLL FOR NEXT