நீலகிரி

போலி பெண் மருத்துவர் மீது வழக்குப் பதிவு

DIN

கோத்தகிரியில் மருத்துவப் படிப்பு படிக்காமல் மருத்துவம் செய்த பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோத்தகிரி அரவேணு பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் மனைவி சந்திரிகா. இவர், அப்பகுதியில் கிளினிக் நடத்தி வருகிறார். இந்நிலையில்,  சுகாதாரத் துறை இணை இயக்குநர் (பொறுப்பு) இரியன் ரவிகுமார் தலைமையிலான அதிகாரிகள் சந்திரிகாவின் கிளினிக்கில் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனர். அப்போது,  அவர் ஹோமியோபதி,  அக்குபஞ்சர் படித்துள்ளதாக கூறியுள்ளார். அதற்கான சான்றிதழ்களை ஆய்வு செய்தபோது, அவை போலியானவை என்பது தெரியவந்தது. இதுகுறித்து, கோத்தகிரி காவல் நிலையத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள் புகார் அளித்தனர். இப்புகாரின் அடிப்படையில் சந்திரிகா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நியாய விலைக்கடை மீது விழுந்த மரத்தை அகற்றக் கோரிக்கை

‘க்யூட்-யுஜி’ தோ்வு: முதல் நாளில் 75% போ் பங்கேற்பு

பிளஸ் 1 தோ்வு: கென்னடி பள்ளி 100 சதவீதத் தோ்ச்சி

இணையதளம் மூலமே மனை வரன்முறை, கட்டட வரைபட அனுமதி

2,553 மருத்துவா் பணியிடங்கள்: விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு

SCROLL FOR NEXT