நீலகிரி

சுகாதாரமற்ற குடிநீர்: பொது மக்கள் போராட்டம்

DIN

குன்னூர் அருகே உலிக்கல் பேரூராட்சியில் தரமற்ற குடிநீர் வழங்குவதைக் கண்டித்து அப்பகுதிமக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குன்னூர் அருகே உலிக்கல் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர் சுத்திகரிக்கப்படாமல்
வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் பலருக்கு உடல்நலக் குறைவு ஏற்படுவதாகக் கூறி இப்பகுதி மக்கள் உலிக்கல் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அப்பகுதிக்கு வந்த அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், அனைவருக்கும் சுகாதாரமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

SCROLL FOR NEXT