நீலகிரி

"கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகள் மூலம் உரம் விநியோகிக்க வேண்டும்'

DIN

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேயிலை விவசாயிகளுக்கு, கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் மூலமாகவே உரம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  இது குறித்து நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சி துணைத் தலைவரும், மஞ்சூர் இண்ட்கோ உறுப்பினருமான வாசுதேவன் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
 நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு தற்போது பரவலாக பயிர்க் கடன் வழங்கப்படுவது மகிழ்ச்சியாக உள்ளது. அதேநேரத்தில், பயிர்க் கடனில் தரப்படும் உரத்தை, மஞ்சூரில் உள்ள என்சிஎம்எஸ் நிறுவனத்தின் மூலமாகப் பெற்றுக்கொள்ளுமாறு கிராம கூட்டுறவு கடன் சங்கங்களில் அனுமதி சீட்டு தருகின்றனர். இப்பகுதிகளில் உள்ள 8 கூட்டுறவு கடன் சங்கங்களுமே, என்சிஎம்எஸ் நிறுவனம் மூலமே உரங்களை தருவதால், இதைப் பெற காலதாமதம் ஏற்படுகிறது. அதன் கிளைச் சங்கங்களுக்கு வாரத்துக்கு 2 லோடு உரம் மட்டுமே அனுப்பப்படுகிறது. இது மிகவும் குறைவான அளவாகும். விவசாயிகளுக்கு உடனடியாக உரம் கிடைப்பதில்லை.
 எனவே, இனிமேல் குந்தா பகுதியில் உள்ள மஞ்சூர், எடக்காடு, பிக்கட்டி,  கிண்ணக்கொரை, கைகாட்டி ஆகிய கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகள் மூலமாக பயிர்க் கடன் உரத்தை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது இப்பகுதிகளில் மழை பெய்துள்ளதால் உரமிட ஏதுவான காலமாக உள்ளது. உர விநியோகத்தை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா்கள் நியமனம் ரத்து: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

மழை வேண்டி கோனியம்மன் கோயிலில் சிறப்பு பிராா்த்தனை

கோவை, திருப்பூரை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க கோரிக்கை

அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் ஒற்றைச்சாளர முறையை அமல்படுத்த கோரிக்கை

வேளாண் பல்கலை.யில் பட்ட மேற்படிப்பு, பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT