நீலகிரி

மலைக் காய்கறிகள் விலை கடும் உயர்வு

DIN

நல்ல விலை கிடைத்து வருவதால் மலைக் காய்கறிகளைப் பயிரிடுவதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
 நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலைக்கு அடுத்தபடியாக மலைக் காய்கறிகள்  விளைவிப்பதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனா. இங்கு விளையும்  உருளைக்கிழங்கு, கேரட், பீட்ருட், காலிஃபிளவர் உள்ளிட்ட மலைத் தோட்டக் காய்கறிகள்,
கடந்த நவம்பர் முதல் பிப்ரவரி வரை நிலவிய பனியின் தாக்கத்தால் தரம் குறைந்ததோடு, விலையும் குறைந்து காணப்பட்டது. கேரட் விலை கிலோ ரூ. 6 முதல் ரூ. 7 வரை, பீன்ஸ் விலை ரூ.8 முதல்  ரூ. 10 வரை என விலை குறைவாக  இருந்தது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்தனர்.
 இந்நிலையில், நீலகிரியில் கடந்த ஒரு மாதமாக நல்ல காலநிலை நிலவுவதால் மலைக்காய்கறிகளின் தரமும் நன்றாக உள்ளது. இதன் காரணமாக விலையும் அதிகரித்துள்ளது. கேரட் கிலோ ரூ. 33 முதல் ரூ. 38 வரை, பீன்ஸ் கிலோ ரூ. 60 முதல் ரூ. 70 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலையேற்றம் கோடை சீசன் முடியும் வரை இருக்க வாய்பிருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

SCROLL FOR NEXT