நீலகிரி

அரசு அலுவலர்கள் குடியிருப்புகளைப் புனரமைக்கக் கோரிக்கை

DIN

கோத்தகிரி மிஷன் காம்பவுண்ட் பகுதியில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளைப் புனரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள்  வலியுறுத்தி உள்ளனர்.  
 கோத்தகிரி மிஷன் காம்பவுண்ட் பகுதியில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் கட்டப்பட்டு  30 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன. இக்குடியிருப்புகளில், 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
 இந்த குடியிருப்புகள் பல ஆண்டுகளாக முறையாகப் புனரமைக்கப்படவில்லை. இதனால், பக்கவாட்டுச் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதுடன், மேற்கூரை உடைந்துள்ளது. ஓடுகள் உடைந்துள்ளதால் மழை நாள்களில் மழைநீர் ஒழுகுகிறது. பெரும்பாலான குடியிருப்புகளில் மின் விநியோகம், தண்ணீர் இணைப்பு போன்றவை முறையாக அமைக்கப்படவில்லை.
 எனவே, குடியிருப்போர் நலன் கருதி சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

SCROLL FOR NEXT