முகப்பு
நீலகிரி

டூரிஸ்ட் டாக்ஸி ஓட்டுநர் உரிமையாளர் சங்கம் துவக்கம்

கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் வேன்,  டூரிஸ்ட் டாக்ஸி ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் நல சங்க துவக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:52 PM
பகிர்:

கோத்தகிரி ராம்சந்த் பகுதியில் வேன்,  டூரிஸ்ட் டாக்ஸி ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் நல சங்க துவக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு,  சங்கத் தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். பொருளாளர் பெள்ளி முன்னிலை வகித்தார். செயலாளர் திருச்செல்வம் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக கோத்தகிரி காவல் ஆய்வாளர் பாலசுந்தரம்,  பேருந்து நிலைய கார் ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் வடிவேல் ஆகியோர் சங்க பெயர் பலகையை திறந்து வைத்தனர். இதில், அவைத் தலைவர் ஜான்பிரிட்டோ,  துணைத் தலைவர் நாசர்,  மூர்த்தி, மணி,  சுரேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியையொட்டி பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →