நீலகிரி

கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களுக்கு 50 சதவீதம் போனஸ்

DIN

கூடலூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு லாபத்தில் 50 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க பேரவைக்  கூட்டம் ஆவின் தலைவர் மில்லர் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் செயலாளர் கிருஷ்ணகுமார் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.
இதைத் தொடர்ந்து 2016-17-ஆம் ஆண்டின் நிகர லாபத்தில் 50  சதவீதத் தொகையை 470 உறுப்பினர்களுக்கும் பிரித்து போனஸாக வழங்க முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில்,  துணைத் தலைவர் சளிவயல் ஷாஜி உள்ளிட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள், பால் உற்பத்தியாளர்கள்,  இணை இயக்குநர் கணபதி, மருத்துவர் பார்த்தசாரதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT