நீலகிரி

பொங்கல் பண்டிகை: கரும்பு விலை உயர்வு

DIN

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு விலை அதிகரித்துள்ளது.
 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மஞ்சூரில் பல வண்ணங்களிலான கோலப் பொடிகள், மண் பானை உள்ளிட்ட பல்வேறு பொருள்களை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்று வருகின்றனர். இதில், குறிப்பாக கரும்பு விற்பனையும் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ஒரு கரும்பின் விலை ரூ. 60-க்கு விலை உயர்த்தி விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பொதுமக்கள் குறைந்த அளவிலான கரும்புகளை மட்டுமே வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
 இதுகுறித்து வியாபாரி ஈஸ்வரன் கூறியதாவது:
 இந்த ஆண்டு கரும்புகளை அரசு சார்பில் விளை நிலத்துக்கே சென்று கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்து வருகின்றனர். இதனால், கரும்பின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT