முகப்பு
நீலகிரி

கோத்தகிரி வட்டத்தில் மறு நில அளவைப் பணிகள் இன்று தொடக்கம்

தமிழக அரசின் உத்தரவின் பேரில் நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாக கோத்தகிரி வட்டத்தில் மறு நில அளவைப் பணிகள் மார்ச் 1ஆம் தேதி  தொடங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

தமிழக அரசின் உத்தரவின் பேரில் நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாக கோத்தகிரி வட்டத்தில் மறு நில அளவைப் பணிகள் மார்ச் 1ஆம் தேதி  தொடங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட  ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
இந்திய மின் ஆளுமை நில ஆவணங்கள் மேலாண்மைத் திட்டத்தின்கீழ், தமிழகத்தில் நவீன தொழிற்நுட்பம் மூலம் மறு நில அளவைப் பணிகள் மேற்கொள்ள தமிழக அரசு ஆணையிட்டுள்ளதன் பேரில், நீலகிரி மாவட்டத்தில் முதல்கட்டமாக கோத்தகிரி வட்டத்தில் மறு நில அளவைப் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
இதற்கான நவீன கருவிகள் நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநரால் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நிலத்தின் எல்லைகளைத் துல்லியமாக நிர்ணயம் செய்தும்,  நில அளவைப் பணிகளை எளிதாக  மேற்கொண்டும்,  மிகச் சரியான பரப்பளவைத் துல்லியமாக உடனுக்குடன் கண்டறிந்து நில அளவை ஆவணங்களை டிஜிட்டல் முறையில் விரிவாகத் தயார் செய்தும் பொதுமக்களுக்கும்,  அரசு நிர்வாகத்துக்கும் பெரும் பயன் அளிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டப் பணிக்காக நீலகிரி நில அளவைத் துறை உதவி இயக்குநர் தலைமையில் ஒரு  நில அளவை ஆய்வாளர், 2 துணை ஆய்வாளர்கள்,  2 தலைமை வரைவாளர்கள், 2 வரைவாளர்கள்,  8 சார் ஆய்வாளர்கள்,  12 நில அளவர்கள்,  6 புல உதவியாளர்கள்  ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதற்காக கோத்தகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன மறு நில அளவை அலுவலகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டு தொடர்ந்து அங்கேயே  செயல்பட உள்ளது என ஆட்சியர்  தெரிவித்துள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →