குடிகாரர்களின் கூடாரமாக மாறிய எரிவாயு தகன மேடை வளாகம்
கூடலூர் காளம்புழா பகுதியில் உள்ள நகராட்சி எரிவாயு தகன மேடை வளாகம் குடிகாரர்களின் கூடாரமாக மாறியுள்ளது.
கூடலூர் காளம்புழா பகுதியில் உள்ள நகராட்சி எரிவாயு தகன மேடை வளாகம் குடிகாரர்களின் கூடாரமாக மாறியுள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் நகராட்சி சார்பில் ரூ.6 கோடி செலவில் காளம்புழா பகுதியில் எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. பிரதான சாலைகளில் அரசு மதுக் கடைகளை நடத்த உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் கூடலூர் நகரில் இருந்த இரண்டு டாஸ்மாக் மதுக் கடைகளும் காளம்புழா பகுதியில் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இதனால் இதன் அருகில் உள்ள மயான வளாகம் தற்போது பாராக மாறியுள்ளது. இங்கு மது அருந்துபவர்கள் மதுபாட்டில்களை அங்கேயே விட்டுச் செல்வதால் குவியல் குவியலாக அப்பகுதியில் மது பாட்டில்கள் கிடக்கின்றன.
மேலும் பிளாஸ்டிக் குப்பைகளும் குவிந்து கிடக்கின்றன. இதனால் மயானத்திற்கு உடலை எரியூட்ட வருவோர் அதிப்தி அடைந்துள்ளனர்.