நீலகிரி

கூடலூர் நீதிமன்றத்தில் இலவச மருத்துவ முகாம்

DIN

கூடலூர் நீதிமன்ற வளாகத்தில்  இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, கூடலூர் வழக்குரைஞர்கள் சங்கம், நீதிமன்ற ஊழியர்கள் இணைந்து நீதிமன்ற வளாகத்தில் நடத்திய இலவச மருத்துவ முகாமை சார்பு நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு  செயலாளருமான கே.சுரேஷ்குமார் துவக்கி வைத்தார். உதகை சார்பு நீதிபதி வே.புகழேந்தி, பந்தலூர் நீதித் துறை நடுவர் என்.செந்தில், கூடலூர் நீதித் துறை நடுவர் ஆ.தமிழ்ச்செல்வன், நீலகிரி மாவட்ட சுகாதார இணை இயக்குநர் பொற்கொடி,  கூடலூர் வழங்குரைஞர்கள் சங்கத் தலைவர் கே.பாஸ்கரன் உள்ளிட்டோர்   கலந்துகொண்டனர்.
வயநாடு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் பொது மக்களுக்கு  பரிசோதனை செய்து,  சிகிச்சை அளித்தனர். சுமார் 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

SCROLL FOR NEXT