நீலகிரி

குன்னூர், கோத்தகிரியில் பன்றிக் காய்ச்சல் தடுப்புப் பணி தீவிரம்

DIN

குன்னூர், கோத்தகிரியில் பன்றிக் காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்காகத்  தீவிர சுகாதாரப் பணி செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது.
  மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநரான டாக்டர் பொற்கொடி உத்தரவின்பேரில் வட்டார மேற்பார்வையாளர் மணிகண்டன்,  குன்னூர் நகராட்சி  ஆணையர் சரஸ்வதி ஆகியோர் தலைமையில்  டெங்கு கொசு ஒழிப்புப் பணியாளர்கள், குன்னூர், கோத்தகிரி பேருந்து  நிலையத்தில் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டனர். அங்குள்ள இருக்கைகளில்  கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தினர்.
  பேரூராட்சி செயல் அலுவலர்  குணசேகரன், சுகாதார ஆய்வாளர்கள்  கண்ணன், குமாரசாமி, சுதாகர் ஆகியோர் மேற்பார்வையில் கோத்தகிரி பேரூராட்சி சுகாதாரப் பணியாளர்களும்  தீவிர சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா -ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

சமுதாய நல்லிணக்கமும் ஆர்.எஸ்.எஸ்.ஸும்

கலை, அறிவியல் படிப்புகளுக்குத் திரும்பும் மாணவா்களின் கவனம்!

கட்டணம் கேட்ட சுங்கச்சாவடி பெண் ஊழியரை இடித்துச் சென்ற கார்!

வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமா் மோடி இன்று வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT