நீலகிரி

குன்னூர், கூடலூரில் கடைகள் அடைப்பு; உதகை, மஞ்சூரில் வழக்கம்போல கடைகள் திறப்பு

DIN

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் காரணமாக நீலகிரி மாவடத்தில் குன்னூர், கோத்தகிரி, கூடலூர் பகுதிகள் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அதேசமயம், உதகை, மஞ்சூர் பகுதிகளில் வழக்கம்போல் கடைகள் திறக்கப்பட்டிருந்தன.
குன்னூர், கோத்தகிரியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. உணவு கிடைக்காமல் சுற்றுலாப் பயணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.  
ஆட்டோக்கள், சுற்றுலா வாகனங்கள், லாரிகள், சிற்றுந்துகள் இயக்கப்படவில்லை. அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
கூடலூரில்...  கூடலூர், சுற்றுப்புற ஊர்களில் கடைகள், வணிக நிறுவனங்கள் முழுவதுமாக அடைக்கப்பட்டிருந்தன. சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படவில்லை.  இதனால், வெளி மாநிலங்களிலிருந்து வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் உணவு கிடைக்காமல் அவதிக்குள்ளாகினர். அரசுப் பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டன.  
தனியார் வாகனங்கள் ஓடாத காரணத்தால்  பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.  சாலையில் சென்ற வாகனங்களைத் தடுத்தகாக 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதிய பேருந்து நிலைய சந்திப்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், அதன் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
பழைய பேருந்து நிலைய சந்திப்பில் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர். முழு அடைப்பு போராட்டம் கூடலூரில் அமைதியாக நடைபெற்றது.
உதகையில்... முழு அடைப்புப் போராட்டம் காரணமாக உதகையில் சிறுந்துகள், லாரிகள் இயக்கப்படவில்லை. வழக்கம்போல கடைகள் திறக்கப்பட்டிருந்தன. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
மஞ்சூரில்... பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில், மஞ்சூர், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வழக்கம்போல கடைகள் திறக்கப்பட்டிருந்தன. அரசுப் பேருந்துகள், தனியார் வாகனங்கள் தடையின்றி இயக்கப்பட்டன. போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எலக்சன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

SCROLL FOR NEXT