நீலகிரி

தேனீக்கள் கொட்டியதில் மூவர் மயக்கம்

DIN

குன்னூர் அருகே தேனீக்கள் கொட்டியதில், திருப்பூரைச் சேர்ந்த  மூன்று பேர் வெள்ளிக்கிழமை மயக்கமடைந்தனர்.
திருப்பூரைச் சேர்ந்தவர் விஜயகுமார், அச்சகம் நடத்தி வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களது மகன் உதய் கோத்தகிரியிலுள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
மகன் உதய்க்கு ஆண்டு விடுமுறை என்பதால் அவரை அழைத்துச் செல்ல பெற்றோர் கோத்தகிரி வந்தனர். மகனை காரில் அழைத்துக்கொண்டு குன்னூர் வந்தனர்.
வழியில், குன்னூர் பிராவிடன்ஸ் கல்லூரி அருகே காரை நிறுத்தி இயற்கைக் காட்சிகளை ரசித்தனர். அப்போது ஒரு மரத்தின் கிளை உடைந்து தேனீக் கூடு கீழே விழுந்திருந்ததைக் கண்டு  ஒரு குச்சியால் அதை அகற்ற முயற்சி செய்தனர்.
அப்போது ஏராளமான தேனீக்கள் பறந்து வந்து அவர்களைக் கொட்டின. இதில் மூவரும் மயங்கி கீழே விழுந்தனர். இதைக் கண்ட பொதுமக்கள் அவர்கள் மூவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குன்னூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கபடுகிறது. 
இதுகுறித்து மேல் குன்னூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT