நீலகிரி

மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டி: இரு பிரிவுகளில் மிதிலேஷ் சுந்தர் சாம்பியன்

DIN

உதகையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டிகளில் மிதிலேஷ் சுந்தர் இரு பிரிவுகளில் சாம்பியன் பட்டம் வென்றார்.
நீலகிரி மாவட்ட இறகுப்பந்து கழகம் சார்பில் மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டிகள், உதகை அண்ணா உள்விளையாட்டரங்கில் நடைபெற்றன. மாவட்டத்தின்  பல்வேறு பகுதிகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர்.  
இப்போட்டிகளில் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் மிதிலேஷ் சுந்தர் சாம்பியன் பட்டம் வென்றார். ஆடவர் இரட்டையர்  பிரிவில் மிதிலேஷ் சுந்தர்- சுனில் இணை, ஆசிக் -நரேந்திரா இணையை 21-15, 21-10 என்ற செட் கணக்கில் வென்றது. 
கலப்பு இரட்டையர் பிரிவில் மிதிலேஷ் சுந்தர்- யோகிதா இணை, தீப்தி-அரவிந்த் இணையை 21-18, 21-15 என்ற செட் கணக்கில் வென்றது.  வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் கணக்கு அதிகாரியாகப் பணியாற்றும் மிதிலேஷ் சுந்தர் சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச இறகுப்பந்துப் போட்டிகளில் இந்திய அணி சார்பில்  பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

SCROLL FOR NEXT