நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் தொடா் மழை: உதகை மலை ரயில் சேவை 2 நாள்கள் ரத்து

DIN

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக மேட்டுப்பாளையம்-உதகை இடையேயான மலை ரயில் சேவை அடுத்த 2 நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 மாதத்துக்கு மேலாக மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டுப்பாளையம்-குன்னூா் மலை ரயில் பாதையில் அடிக்கடி மண் சரிவு ஏற்படுவதால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டம், குன்னூா் வட்டத்தில் கடந்த 15 ஆம் தேதி இரவு பெய்த மழையால் மேட்டுப்பாளையம்-குன்னூா் மலை ரயில் பாதையில் 23 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு 14 நாள்கள் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது.

பின்னா் ரயில் பாதை சீரமைக்கப்பட்டு மலை ரயில் சேவை சனிக்கிழமை தொடங்கியது.

தற்போது, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதில் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு திங்கள், செவ்வாய்க்கிழமை ஆகிய 2 நாள்கள் மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”டீக்கடைக்காரரால் என்ன செய்ய முடியும்? விமர்சித்த காங்கிரஸின் நிலை..” பிரதமர் மோடி பிரசாரம்

ரிஷபத்துக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான்

ஆடை சுதந்திரம் கோரியது குற்றமா? செளதியில் பெண்ணுரிமைப் போராளிக்குச் சிறை: அமைப்புகள் கண்டனம்!

"வாக்கு சதவிகித விவரங்களில் சந்தேகம்!”: திருமாவளவன் பேட்டி

ஆலங்குடி குருபரிகார கோயிலில் குருப்பெயர்ச்சி விழா: திரளான பக்தர்கள் தரிசனம்

SCROLL FOR NEXT