நீலகிரி

உதகையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

DIN


உதகையில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 200 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பெற்றுக்கொண்டார்.
இதில், பொதுமக்கள் தரப்பில் இருந்து குடும்ப அட்டை, வீட்டுமனைப் பட்டா, தொழில் மற்றும் கல்விக் கடன் உதவி, முதியோர் உதவித் தொகை, சாலை, குடிநீர், கழிப்பிடம், மின்சார வசதி உள்பட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 200 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் பரிசீலனை செய்து தகுதி இருப்பின்  உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆட்சியர்  உத்தரவிட்டார். சமூகப் பாதுகாப்புத் திட்ட  தனித் துணை ஆட்சியர் முருகன், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் பாஸ்கரன், அரசுத் துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

SCROLL FOR NEXT