நீலகிரி

கோத்தகிரியில் பூத்துக் குலுங்கும்  ஜப்பான் மலர்கள்

DIN

கோத்தகிரி தேசிய நெடுஞ்சாலையோரங்களில் பூத்துக் குலுங்கும் ஜப்பான் மலர்களை  நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.
  நீலகிரி மாவட்டத்தில் தேயிலைத் தோட்டங்கள், சுற்றுலாத் தலங்கள் அதிக அளவில் உள்ளன. தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
 கோத்தகிரி  சாலையோரங்கள், சுற்றுலாத் தலங்கள், தேயிலைத் தோட்டங்கள், குடியிருப்புப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் ஜப்பான் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இவற்றை இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் பொதுமக்கள் பார்த்து ரசிக்கின்றனர்.
 ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நிழல் தரும் மரமாகவும், தேயிலைத் தோட்டங்களை அழகுபடுத்தவும், வேலிக்காகவும் ஜப்பான் மரக்கன்றுகள் நடப்பட்டன.
 இந்த மரங்களில் ஆண்டுக்கு ஒரு முறை மலர்கள் பூக்கும். அப்போது மரத்தில் உள்ள இலைகள் உதிர்ந்து, மலர்கள் மட்டும் இளஞ்சிவப்பு  நிறத்தில் பூத்துக் குலுங்கும். இதனால் மரம் முழுவதும் அழகாகக் காட்சியளிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

SCROLL FOR NEXT