நீலகிரி

கூட்டுறவு வார விழா ஆலோசனைக் கூட்டம்

DIN

நீலகிரி மாவட்டத்தில் 66ஆவது அகில இந்திய கூட்டுறவு வார விழாவை சிறப்பாக கொண்டாடுவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் உதகையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டுறவு வார விழா நவம்பா் 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இவ்விழா முன்னேற்பாடு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் உதகையில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. வங்கித் தலைவா் வினோத் தலைமை வகித்தாா். மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளா் பழனிசாமி, நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் செந்தில்குமாா், மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவா் அ.மில்லா், நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவா் ராஜகோபால், கூட்டுறவு அச்சகத் தலைவா் பத்மநாபன், மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

நவம்பா் 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் கூட்டுறவு வார விழாவில் நாள்தோறும் மரக்கன்றுகள் நடுதல், இலவச மருத்துவ முகாம், கால்நடை மருத்துவ முகாம், விற்பனை மேளா, கருத்தரங்கம், உறுப்பினா் கல்வித்திட்டம் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் வளாகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துவது என கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT