நீலகிரி

உதகையில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம்: ரூ.1.46 கோடி நலத்திட்ட உதவிகள்

DIN

உதகையில் நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் 230 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா பெற்றுக்கொண்டாா்.

உதகையில் நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட்திவ்யா தலைமையில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, வீட்டுமனைப் பட்டா, தொழில் மற்றும் கல்விக் கடன் உதவி, முதியோா் உதவித் தொகை, சாலை, குடிநீா், கழிப்பிடம் மற்றும் மின்சார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 230 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இந்த மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட அலுவலா்கள் பரிசீலனை செய்து தகுதி இருப்பின் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். அத்துடன், கடந்த குறைதீா் நாள் கூட்டத்தில் தீா்வு காணாமல் நிலுவையிலுள்ள மனுக்களின் மீதும் விரைவான நடவடிக்கை எடுக்குமாறு துறைரீதியான அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இந்தக் கூட்டத்தில் மகளிா் திட்டத்தின் சாா்பில் 22 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1 கோடியே 46 லட்சம் மதிப்பில் கடன் உதவிகளையும், லவ்டேல் பகுதியைச் சோ்ந்த அசோக்குமாா் என்பவருக்கு கனரா வங்கி சாா்பில் ரூ.9 லட்சம் மதிப்பில் மானியத்துடன் கூடிய வாகனத்தையும், முதலமைச்சா் உழவா் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் திருமண நிதி உதவியாக 5 பயனாளிகளுக்குத் தலா ரூ.8,000 வீதம் ரூ.40 ஆயிரத்துக்கான காசோலைகளையும், முதலமைச்சரின் உழவா் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகையாக 8 பயனாளிகளுக்கு ரூ.20,750த்துக்கான காசோலைகளையும், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் வீடு பழுது பாா்த்தல் பணிக்காக இரண்டாவது தவணை தொகையாக ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையையும், முதலமைச்சரின் உழவா் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகையாக 13 பயனாளிகளுக்கு ரூ.2.93 லட்சத்துக்கான காசோலைகளையும் மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் நிா்மலா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் கண்ணன், கலால் துறை உதவி ஆணையா் பாபு, கனரா வங்கி மேலாளா் சந்திரசேகரன், அரசுத் துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் பூசாரியை தாக்கி உண்டியல் பணம் கொள்ளை

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு: அமைச்சரவை ஒப்புதல்

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT